tamil kadavul vinayagar and tamil kadavul murugan



பிள்ளையார் :
i.pinimg.com/originals/da/f1/d9/daf1d9e55e98cc9...

  • பிள்ளையார் ஒரு தமிழ் கடவுள் 
  • முருகன் ,குமரன் ,கார்த்திகேயன் மூன்றும் வெவ்வேறு கடவுள் 
  • விநாயகருக்கு ஏன் எந்த உருவம் 
Murugan Wallpapers - Wallpaper Cave


                மன்னர் மன்னன் என்ற நாணயவியல் நிபுணர் நியூஸ் க்ளிட்ஸ் என்ற யூடூப்பில் விநாயகர் வழிபாடை பற்றி கூறியதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் .

வீட்டிற்கு வெளியில்  விநாயகரை வழிபடுவதை 1893 ஆம் ஆண்டு முதல் முதலில் வட இந்தியாவில் பல கங்காதர திலக் அறிமுகம் செய்தார்.அதற்கு முன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கிடையாது ஆனால் விநாயகர் வழிபாடு இருந்தது.வீடுகளில் வழிபாடு நடந்தது .
தமிழகத்தில் 1950 வரை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கிடையாது.ஐம்பதுக்கு பிறகுதான் ஒரு சில இடங்களில் கொண்டாட பட்டது அதன் பிறகு எழுவதில் பெரிய கூட்டம் திரண்டு ஊர்வலம் சென்றனர்.

தமிழி என்ற எழுத்து முறை நாணயவியலில் கண்டு பிடிக்க பட்டது.சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்பதை கீழடி ஆய்வில் அனைவரும் அறிந்தோம் அதற்கு முன் பெறுவோழுதி என்ற பாண்டிய அரசர் தமிழ் எழுத்துக்களில் நாணயம் வெளியிட்டார் 

 மக்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் வழிபாடு வந்தது என மக்களும் திரவிட மற்றும் ஆனமீக கூறினர் .வரலாற்று நூல்களை பார்த்த பொழுது கிபி ஏழாம் நூறாண்டிற்கு பிறகு தான் பல்லவர் காலத்தில் வாதாபிகன் என்று பிள்ளையாரை தமிழகத்திற்கு அறிமுகம் ஆனார், அதனால் தான் பிள்ளையாரை வாதாபிகன் என்று கூறுவர்.

நாணயவியல் ஆய்வில் கிபி பதினாலாம் நூறாண்டு முதல் கிபி பதினெட்டாம் நூறாண்டிற்கு இடைப்பட்ட  நானூறு ஆண்டுகளில் நூறிற்கும் மேற்பட்ட வகைகளில்  கணபதி நாணயங்கள் வெளியிட பட்டது .சேர அரசர்கள் ,விஜயநகர தெனிந்திய அரசர்கள் ,நாயகர்கள் ,மராட்டியர்கள் ,சேதுபதி அரசர்கள் விநாயகர்  நாணயங்கள் வெளியிட்டனர் .

தமிழ்நாட்டில் மட்டும் நூறுக்குமேற்பட்ட வகையில் நாணயம் கண்டெடுக்க பட்டுள்ளது.
வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தெற்கிற்கு வந்திருந்தால் தொண்ணூறு ஐந்து சதவிதம் நாணயங்கள் வடக்கில் இருக்க வேண்டும் .அதனால் ஆராய்ச்சி மேலும் நடத்த பட்டது. சைவர்கள் பொறுத்த வரை கிபி ஆறாம் நூறாண்டிற்கு முன்னர் விநாயகருக்கு இடம் கொடுக்க படவில்லை ,சிவனும் ,முருகனும் மட்டும் சைவர்கள் வணங்கியும் பேசியும் வந்தார்கள்.

கிபி ஆறாம் நூறாண்டிற்கு பிறகு விநாயகரை வழிபட பட்டது .தமிழர்களின் சங்க இலக்கிய நூல்களில் புறநானுறில் நூறி ஆறாவது பாடலில் கடவுளுக்கு சாதாரணமாக கொஞ்சம் புள்ளும் ,ஏறுக்கம் பூ குடுத்தாலும் வேண்டாம் என்று கடவுள் கூறமாட்டார் என்றும் ,தமிழ் சித்தர் திருமூலர் தன் பாட்டில் வில்வ இலையை வைத்து வழிபடலாம் என்று கூறி இருக்கிறார் .

மக்கள் அக்காலத்தில் இயற்கையுடன் ஒன்றிய வழிபாட்டு முறையை வைத்திருந்தார்கள் .
பல்லவர் காலத்தில் அதாவது கிபி ஏழாம் நூறாண்டில்  விநாயகர் வழிபாடு தொடங்கியது என்று கூறுகிறார்கள். அனால் பிள்ளையார்பட்டியில் இருக்கும் பிள்ளையாரின் சிலை கிபி ஆறாம் நூறாண்டில் செதுக்கப்பட்டது .திண்டிவனம் அருகவே இருக்கும் ஆளகிராமம் ஊரில் விநாயகர் சிலை இருக்கிறது .

ஆளகிராமத்தில் இருக்கும் விநாயரின் சிலையில் முந்துதமிழ் வட்ட எழுத்துக்கள் இருந்தன .
அந்த வட்ட எழுத்து கிபி நான்காம் நூறாண்டிலேயே இருந்தது .வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தெனிந்தியா வந்தது என்றால் பழங்கால விநாயகர் சிலைகள் வட இந்தியாவில் தான் கிடைத்திருக்க வேண்டும் அனால் உலகிலேயே பழமையான விநாயகர் மண் சிலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் விவிபுரத்தில் கிடைத்திருக்கிறது .அந்த சிலையின் காலம் கிமு ஐப்பதாம் நூறாண்டில் இருந்து கிபி மூன்னூறுக்குள் என கூறப்படுகிறது .

தென்னிந்தியாவில் அதிகமான தடயங்கள் கண்டெடுக்க பட்டதால் விநாயகர் தென்னிந்தியாவில் தோன்றி வணங்க பட கடவுளாக இருக்கவேண்டும் .

விநாயகர் உருவத்திற்கு விளக்கம் ஆசீவகத்தில் கிடைத்தது .கிழடியில் கல்வி இல்லாத பொழுதும் அவர்கள் எழுத்து வடிவத்தை பயன் படுத்தி உள்ளார் .கினிமங்கலம் என்ற ஊரில் ஏகநாதன் பள்ளிப்படை என்ற ஊரில் ஏகநாதன் கோட்டம் என்ற பழமையான கல்வெட்டு கிடைத்தது.அக்கல்வெட்டு கிமு முன்  ஆசீவனசமயத்தை சார்ந்தது .

ஆசீவன சமயம் மக்களுக்கு ஞானம் ,ஒரு விசயத்திற்கு தீர்வு தருவதற்கு ஆராய்ந்து அறிவுரை கூறுபவர்கள்.சங்ககாலத்திற்கு முன் இத்திருக்கிறது அனால் அரசர்களிடம் வரவேற்பு குறைத்தால் அவர்கள் அளிக்க பட்டார்கள் .அய்யனாரும் ஆசீவன சமயத்தை சார்தவர் அவரும் விநாயகரும் ஆசீவக சமயத்தில் இருந்து வெளியே வந்தனர்.

ஆசீவன சமயத்திலிருந்து கணபத்யம் என்ற வழிபாட்டு முறை கணபதியை வழிபடுவதற்கு தொடங்கியது .பின்வரும் காலத்தில் சாத்தம் ,சௌமாரம் ,காணாபத்யம் போன்ற  ஆறு சமயம் (ஷண்மதம் ) ஒருசேர்த்து ஹிந்து சமயத்தில் சேர்த்தனர்,


முருகனின் அறுபடை  வீட்டின் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாறு பற்றி அரிய கீழ் காணும் இணைப்பை அழுத்தவும் 




























Comments